Wednesday, 8 November 2017

BIG BREAKING NEWS. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) இன்று வந்தது.

👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
*BIG BREAKING NEWS*

*இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) இன்று வந்தது.*

*விசாரணையின் போது, நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி குறித்து விரிவாக விளக்கினார்.*

😳😳😳😳😳😳
*நீதியரசர் நான்கு வாரத்திற்குள் அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.*

*பின்னரும் நமது வழக்கறிஞர் வாதத்தைத் தொடர்ந்தார்.*

😲😲😲😲😲😲😲
*மீண்டும் மூன்று வாரத்திற்குள்ளாக அரசு பதில் அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.*

👐🏻👐🏻👐🏻👐🏻👐🏻👐🏻
*நமது தரப்பில் மறுப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 2016ல் அரசு வழங்கிய  எழுத்துப்பூர்வ  உத்தரவாத கடிதத்தை சுட்டிக்காட்டினார்.*

நீதியரசரிடம் நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை புரிந்து கொண்டார்.....

😱😱😱😱😱😱

*நீதியரசர் அரசு தரப்பைப் பார்த்து, "ஒரே பதவிக்கு" 1.6.2009 முன்பு ஒரு ஊதியம்  பின்பு ஒரு ஊதியம் என எப்படி இருவேறு ஊதியம் வழங்கப்படுகிறது எனக் கேட்டார்.*

*அரசு தரப்பில் பதில் ஏதுமில்லை.*
*நமது தரப்பில் அரசாணை எண்--303 படி மூன்று மாத காலத்தில் விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்துவிட்டு...*
*பின்னர்  அரசு நிதித்துறை கடிதம் மூலமாக 20 ம் தேதிக்குள்  விருப்பம் அளிக்க கட்டாயப்படுத்துகிறது எனக் கூறப்பட்டது.*

😡😡😡😡😡😡😡
*நீதியரசர் உடனடியாக அரசு தரப்பில் நாளை மறுதினமே பதில் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.*

*நாளை மறுதினம் (10.11.2017) மீண்டும் விசாரணை தொடரும்.....*

*இடைநிலை ஆசிரியர்களுக்கு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....*

No comments:

Post a Comment