Saturday, 21 October 2017

தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கிச் செல்லும் சங்கத் தலைமைகள்......

தவறான முன்னுதாரணத்தை உண்டாக்கிச் செல்லும் சங்கத் தலைமைகள்......

1984 , 1988 , 2003 போராட்ட காலங்களில் நடந்த ,தன்னலமற்ற போராட்டங்களைச் சுட்டிக்காட்டியே போராட்டக் களங்களை அமைத்து , அதிக எண்ணிக்கையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை கூட்டத்திற்காக மட்டுமே வைத்துக்கொண்டு , தனக்கு வேண்டியதைப் பெற்றுவிட்டு , இடைநிலை ஆசிரியர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் சுயநலத்தலைமைகள்,  தங்கள் முன்னோர்கள்  இப்படி ஒரு துரோகச் செயலை செய்திருந்தால் தங்கள் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

1984, 1988, 2003 -ல் போராடியவர்கள் தன் குழந்தை, தன் உறவினர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். ஆனால் இன்றுள்ள தலைமைகளின் குழந்தைகள் மருத்துவம் , பொறியியல் படிப்பதால் தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

குறைந்த பட்சம் தனக்குக் கீழுள்ள மாவட்டச் செயலாளர்களிடம் கூட தங்களின் துரோகத்திட்டத்தைக் கூறாததால்தான், துரோகமிழைத்த சங்கங்களின் மாவட்ட , வட்ட நிர்வாகிகள் தலைகுனிந்து வெட்கத்தோடு செல்கிறார்கள்.

6வது ஊதியக்குழுவில் எந்த யுக்தியைக் கையாண்டார்களோ, அதே யுக்தியைத்தான் இன்றும் அரங்கேற்றியுள்ளார்கள். 2010 -ல் நடந்த சென்னை பேரணியில் பிரிவினையை உண்டாக்கி, பாதகத்திற்கான முதல் புள்ளியை வைத்துவிட்டு, டிசம்பரில் நடந்த இறுதிக்கட்ட 5 நாள் போராட்டத்தை 3 நாட்களிலேயே தங்களுக்கு வேண்டியதைக் கொடுக்கத் தயாராக இருந்ததால , 750-க்கு சரி  என்று துரோகம் செய்து மிகப்பெரிய  பாதிப்பை உண்டாக்கிய அதே தலைமைகள்தான், இன்றும் அதைவிடக் கேவலமான துரோகத்தை செய்துவிட்டு சிரித்த முகத்துடன் முதல்வர் வீட்டின் வாசல்படியில் நின்று நன்றி சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.

இதில் ஒரு சங்கத்தலைமை ₹2000 தன் ஊதியத்திற்கு ஊதிய உயர்வையும், அகவிலைப்படியையும் ஆணையாகப்  பெற்றுத்தருவோம் என்று வாக்குக் கொடுக்கிறார்கள். அதையும் அந்த இயக்கத்தைச் சார்ந்த இடைநிலை ஆசிரியப் பெருமக்கள் ஏற்றுக்கொண்டு ஊமைகளாகத்தான் இருக்கிறார்கள்.

2009-ல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு இயக்கத்தின் தலைமை சொன்ன வார்த்தை. " நீ பணிக்கு வந்து எவ்வளவு நாளாகிறது, உனக்கு 9300  + 4200 கொடுத்தால் உனக்கு ஊதிய உயர்வு 60 % வரும் , எங்களுக்கு 40% கூட வரவில்லை கொடுத்ததை வங்கிக் கொண்டு அமைதியாக இரு " என்று.

இத்தகைய சுயநலவாதிகளின் சங்கத்தில் இப்போது இருப்பவர்கள் , பிற்காலத்தில் நிர்வாகிகளாக எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள். சுயநலத்தையும் , துரோகம் ஒன்றை மட்டுமே கொள்கைகளாக வைத்துக் கொண்டிருக்கும் தலைமைகளால்தான் இன்று இயக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

" கூத்தாடி இரண்டுபட்டால் ஊருக்குக் கொண்டாட்டம்" என்பதுபோல்தான் இன்று அரசுகளும் பேரம்பேசி அடிமைகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு அநீதி இழைத்திருக்கிறது.

ஒரு சங்கத் தலைமை
  சொல்கிறார் " உங்களுடைய கோபம் அரசு மீதுதான் இருக்க வேண்டும்,  பின்வாங்கிய எங்கள்மேல் இருக்கக்கூடாது " என்று . 2013, 2014-ல் தான் பணியில் சேர்ந்துள்ளேன். என்னுடைய பணிக்கு பாதிப்பு வருமே என்று கூறியபோது " நாங்கள் பார்த்துக் கொள்வோம்,  நீ வா என்று ஆகஸ்டு- 22-ல் அனைத்துப் பள்ளிகளையும் மூடிவிட்டு , கூட்டத்தைக் காட்டி உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு சிரித்த முகத்தோடு நன்றி சொல்லிவிட்டு வந்ததற்கு என்ன அர்த்தம்.
இனிமேலாவது இப்படி ஒரு " __________ " வேலை பார்க்காதீர்கள்.

அடுத்த தலைமுறையாவது தன்னலம் பாராது போராடட்டும்.

" வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி

பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி "

இதில் நீங்கள் எந்த ஜாதி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அ. இஞ்ஞாசிமுத்து ( வயது 47 )
இடைநிலை ஆசிரியர்
ஆர்.எஸ்.மங்கலம் - ஒன்றியம்.
இராமநாதபுரம்- மாவட்டம்.

*ஏழாவது ஊதியக் குழு - ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்க கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றலாம்*

1. 01.01.2016 அல்லது

2. 01.01.2016 க்கு பிறகு ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள லாம். If u get benefits after the first or second increments up to date u give option. அல்லது 1.1.16க்கு பிறகு பதவி உயர்வு பெற்று,(9.10.17 ) க்குள்  பதவி உயர்வு பெற்று இருந்தால்  அந்த தேதிகளில் U can give option. அந்த விருப்ப தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். 

@@@@

Those who get 500 spl pay nothing noticed in the GO. We have to ask clarification. 



Source : G.O.Ms.No.303, Dated : 11.10.2017 - point No. 8 (a,b,c).

*TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டுள்ளன

*TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன*

விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*இடைநிலை ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

*Lab Assistant மற்றும் இதர கல்வித்துறை பணியாளா்கள்* எழுத வேண்டிய தாள்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

4.137_ The Account Test for subordinate Officers part II

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*How to Do Pay Fixation - Full Details!*

The Tamil nadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும் சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது. பக்கம் 9 - ல் 3 (1) ல் existing Basic Pay பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில் does not include any other type of pay like Spl pay , personal pay etc என உள்ளது.

எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்தாக Pay matrix*

2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay matrix table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில் அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal to or next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும்.

*Increment கணக்கிடுதல்*

அடுத்ததாக Increment கணக்கிடுதலில் புதிய அடிப்படை ஊதியத்தை 3% ஆல் பெருக்கி increment கணக்கிடக் கூடாது. *Increment கணக்கிடும் போது Pay matrix table - ஐ தான் பார்க்க வேண்டும்.* பக்கம் 14 - ல் 9 Increments in pay matrix என்ற தலைப்பில் *The increment shall be effected by moving vertically down along the applicable level by one cell from the existing cell of pay in the Pay matrix.*
(Illustration - III - See schedule - V) என உள்ளது.
*அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது.* (Vertically down along the applicable level by one cell).
எனவே increment - க்கும் Pay matrix இவ்வாறாக பார்த்து increment தொகையுடன் கூடிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக அடுத்த increment - க்கு அடுத்த cell - க்கு கீழே வந்து அதனை increment உடன் கூடிய ஊதியமாக கொள்ள வேண்டும்.
*Increment தொகை 3% தொகையளவு இருந்தாலும் ஆறாவது ஊதிய குழு போல 3% ஆல் வகுத்து கணக்கிட தற்போதைய குழுவில் விதிகளில் இடமில்லை, pay matrix தான் increment - க்கும் பார்க்க வேண்டும்.*

*தேர்வுநிலை/சிறப்புநிலை கணக்கிடல்*

தேர்வுநிலை/சிறப்புநிலைகளில் 3% + 3% என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

*பக்கம் 3-ல் 10- ல் இவைகளை குறிப்பிடும் போது two increment என்றே உள்ளது.*

எனவே increment கணக்கிட கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின்படியே தே.நி/சி.நி கணக்கிடும்போது two increments - க்காக pay matrix - ல் two cell கீழே வந்து ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

*Personal Pay*

தனி ஊதியமான 750 - ஐ 2.57 ஆல் பெருக்கி தற்போது தனி ஊதியம் 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 10 - ல் 3(VIII) - ல் basic pay in the revised pay structure means எனக் குறிப்பிட்டு basic pay என்பது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை எனக் குறிப்பிட்டு அதில் special pay/ Personal pay etc சேராது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே 1.1.16 - ல் 2.57 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் தனி ஊதியம் 2000 - த்தை கூட்டி Pay matrix - ல் பார்க்க கூடாது.
PP. 2000 u can add for DA calculations.
For eg.
B.pay  30300
PP          2000
DA 5%    1615
##
For next increment in the table down one column after 30300. That is 31200.

7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு அல்லது ஊதியநகர்வு சில தகவல்கள்....

ஊதிய உயர்வு அல்லது ஊதியநகர்வு 

⭐1) வளரூதியம்(Increment) 
Increment கணக்கீட்டில் நாம் 
3%கணக்கிடும்போது, 
அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான்  ஊதியஅணியில்(paymatrix) 
நமக்கானநிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக 
கொடுக்கப்பட்டுள்ளது, 
என்பதால் இனி Increment 
சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள 
தேவை இல்லை.எனவே 3% Increment எனில் தற்போது 
பெரும் புதிய ஊதியத்திற்கு 
அடுத்த ஊதியத்தைப் புதிய 
அடிப்படை ஊதியமாக எடுத்து 
கொள்ளவேண்டும். 

⭐2)ஊக்கவளரூதியம்(Incentive) 
ஊக்க வளரூதியம் எனில் 
3%+3% தற்போது பெரும் புதியஊதியத்திறக்கு அடுத்த 
இரண்டாவது ஊதியத்தை 
எ.டு;10 ம் Pay cell ஊதியம் 
பெற்றால் 12ஆம் Pay Cell 
ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுத்துக்கொள்ள 
வேண்டும் 

⭐3)தோ்வுநிலை(Selection grade) மற்றும் சிறப்புநிலை(Special grade) 
Rs 1300முதல்Rs 5700 வரையிலான தரஊதியம்(Gp) 
அதாவது Level 1 முதல் 23 வரை ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் 
(தோ்வுநிலை)20 ஆண்டுகள் 
(சிறப்புநிலை)பணிபுரிந்தால், 
வழக்கத்தின்படியே 3%+3%, 
ஊதியஉயர்வு பெற்றுக்கொள்ளலாம்.எனவே 
இதனையும் தனியே கூட்டிப் 
பெருக்காமல்,ஒவ்வொரு 3%திற்கும் ஊதியஅணியில் 
(Paymatrix)தான் உள்ள ஊதிய நிலையின் அடுத்த ஊதியத்திற்கு நகா்ந்து விடலாம்.இது3%+3% என்பதால் ஊதிய அணியில் 
(Paymatrix) தற்போதுபெற்றுள்ள புதிய 
ஊதீயத்திலிருந்து2வது ஊதியத்திற்கு நகர வேண்டும். 
அதாவது 12 ஆம் Pay cellஐ 
அடிப்படையாக கொண்ட நபர் 
14 ஆம் அணிஊதியத்திற்கு 
நகர்ந்து அதையே அடிப்படை 
ஊதியமாகப் பெறுவார்

⭐4)தேக்கவளரூதியம்(Stagnaton 
தரஊதியம் Rs 
6000முதல் 10000 அதாவது 
(Level 24 முதல் 32 வரை) உள்ளோா்.ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 10 
ஆண்டுகள் பணி முடித்தால் 
ஒவ்வொரு 10 ஆண்டு முடிவிலும்,3%தேக்க வளரூதியம் அனுமதிக்கபடும்.அவரது நிலையில், 
14 ஆம்அணி ஊதியம்(PayCell) பெருபவர் 15 ஆம் அணிஊதியத்திற்கு(Paycell) நகர்த்ப்படுவாா். 

⭐5)வெகுமதி வளரூதியம் 
  (Bonus Increment) 
 ஒரே பணியிடத்தில் தொடா்ந்து 30 ஆண்டுகள் பணிமுடித்திருந்தால்,30 ஆம் 
ஆண்டு முடிவில் 3%Bonus 
Increment அனுமதிக்கப்படும். 
Paymarrix ல் உள்ள Paycellல் 
15 ஆம் அணி(PayCell) 
ஊதியம் பெருபவர் 16 ஆம் நிலை ஊதியத்திற்கு நகா்த்தப்படுவாா். 

⭐6)கூடுதல் வளரூதியம் 
    (Additional Increment) 
   
 01.01.2016 ல்  பழைய ஊதிய அடிப்படையில் தனது 
நிலைக்கான உச்சபச்சஊதியத்தை, அடைந்தால் அதாவது 
5200−20200 என்பதில் 20200 
என்ற உச்சபச்சத்தை அடைந்ததால் 2 ஆண்டுகள் 
ஊதிய உயர்வின்றி இருப்பவருக்கு 01.01.2016 ல் புதிய ஊதியத்தை நிர்ணயித்தபிண் கூடுதலாக 
ஒரு 3% Increment அளிக்கவேண்டும்.இவர் 2 ஆண்டிற்கும் மேலாக இதே நிலையில் (20200) இருந்திருப்பாரேயானால் .ஒவ்வொரு 2ஆண்டு முடிவிற்கும்3% Increment அனுமதித்து புதிய ஊதியம் 
நிர்ணயிக்கப்படவேண்டும். 

⭐7)மூத்தோா் இளையோா் 
    ஊதிய முரண்பாடு(Junir get MorePay) 
இதற்கு 3%Increment 
மட்டும் அனுமதிக்கப்படும். 
அதாவது இளையோரை விட 
முதியவருக்கு Pay Cellல் ஒரு 
Cell அதிகரிக்கப்படும். 
இளையோா் 15 ஆம் PayCell என்றால் மூத்தோா்16 ம் Pay செல்லில் வைக்கபடுவாா்

⭐8)தனிஊதியம்( Personal Pay) 
  ஆசிரியர்,BDO, Thashiltar, 
போன்றோா் பெற்றுவந்த தனிஊதியம் 500&750 தொகையானது 1300&2000 மாக உயர்த்தபட்டுள்ளது. 
ஆனால் 6 ம் ஊதியக்குமு 
போன்று 7 ம் ஊதியக்குமுவில் 
தனி ஊதியஉயர்வு கணக்கீட்டிற்கு,(எந்தவிதமான 
ஊதியஉயர்வு கணக்கிட்டிற்கும்), 
இத்தொகையை எடுத்துக்கொள்ளக்கூடாது.
DA -க்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்

ஊஊஊதியக் குழு ...

*_2007 நியமன இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம் 37300. (21வது தளம்)_*

*_2008 நியமன இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம் 36200. (20வது தளம்)_*

*_2009 நியமன இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம் 25300. (8வது தளம்)_*

*_2007 & 2008 அடிப்படை ஊதிய வேறுபாடு 1100._*

*_2008 & 2009 அடிப்படை ஊதிய வேறுபாடு 10900._*

சில ஆசிரியர்களுக்கு நாம் (2009 after teachers)மட்டும் ஏன் தனித்து குழுக்கள் ஆரம்பிக்க வேண்டும், தனித்து போராட வேண்டிய அவசியம் என்ன? என்ற சந்தேகம் உள்ளது. அதற்கான விளக்கம்

சில ஆசிரியர்களுக்கு
நாம் (2009 after teachers)மட்டும் ஏன் தனித்து குழுக்கள் ஆரம்பிக்க வேண்டும், தனித்து போராட வேண்டிய அவசியம் என்ன?   என்ற  சந்தேகம் உள்ளது,

குறிப்பாக CPS போராட்டத்தில் 2003 after teachers எல்லோரும் சேர்ந்து கலந்து கொண்டோம்

இப்போது மட்டும் நாம் தனித்து போராட வேண்டிய அவசியம் என்ன?

2009க்கு முந்தைய இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவில் ஒரு நல்ல ஊதியம் பெறுகிறார்கள்,  ஏனெனில் அவர்கள் அடிப்படை ஊதியத்தில் ஏற்கனவே 1.86 ஆல் பெருக்கப்பட்டு ஊதியம் பெறுகின்றனர்,

(2009 after teachers ) நமக்கு அவ்வாறில்லை
குறிப்பாக

*2008ல் நியமனம்  பெற்ற இடைநிலை ஆசிரியர் மொத்த ஊதியம் 43320. (2800 தர ஊதியம்)*

*_2009ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் மொத்த ஊதியம் 29055. (2800 தர ஊதியம்)_*

_*ஊதிய வேறுபாடு 14265*_

*ஒரே ஒரு ஆண்டின் ஆண்டு ஊதிய உயர்வு ரூ 1000 மட்டுமே வித்தியாசம் வர வேண்டும்...*
*ஆனால் 14000 வித்தியாசம்😭*

இடைநிலை ஆசிரியர்களுக்கு பல இழப்புகள் உள்ளது ஆனால்

2006  இடைநிலைஆசிரியர்--
2007 இடைநிலைஆசிரியர் ஊதிய வேறுபாடு ----2000

2007  ஆசிரியர்
2008இடைநிலைப் ஆசிரியர்ஊதிய வேறுபாடு ----2000

2008 -இடைநிலை ஆசிரியர்
2009இடைநிலை ஆசிரியர் ஊதிய  வேறுபாடு- 14500

முதலில் இந்த ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும்
என்பதே  2009,tet2012 ,tet2014 ஆசிரியர்களின் மனக்குமுறலாக உள்ளது,

நம்முடன் பணி புரியும்
சக ஆசிரியரின் மாநிலத்திற்கு
இணையான ஊதியம் கூட இல்லாமல் பணி புரிவது எவ்வளவு வேதனையை
அளிக்கும் என்பதை எல்லோரும் ஒரு நிமிடமாவது  எண்ணிப் பாருங்கள்

யாருக்கு மிகப்பெரிய பதிப்பு ?

எந்த பிரச்சனை முதலில் களையப்பட வேண்டும்?

எல்லோரும் சிந்தித்து பாருங்கள்! உங்கள் மனசாட்சி உங்களுக்கு பதில் சொல்லும்

சமவேலை சம ஊதியம் (1.86)
என்ற கோரிக்கை

மாநிலத்தில் பணிபுரியும் சக ஆசிரியரின் ஊதியத்தையாவது பெறுவோம் என்ற அடிப்படைச்
சிந்தனையில்

ஒற்றை கோரிக்கைக்காக எவ்வித எதிர்ப்பையும் தாண்டி
எவ்விதமான போராட்டம் என்றாலும் களம் காண
தயார் நிலையில் உள்ளோம்

இந்த நிலைப்பாடு
வெற்றியை நோக்கிச் செல்லமுடியும் என்பதே நிதர்சனம்

இந்த 4200 G.P கேட்டு போராட அழைக்கும் நமது  நண்பர்களுடன்

விவாதங்கள் வேண்டாம்

நாம் கேட்பது மாநிலத்திற்கு இணையான ஊதியம்
ஆனால் அவர்கள் கேட்பது மத்திய அரசுக்கு இணையான ஊதியம்

உணவு போதவில்லை என்பதற்கும்
உணவே கிடைக்கவில்லை என்பதற்கும் உள்ள வேறுபாடே

நம் புரதலில் சற்று வேறுபாடு

எனினும் நாம் அனைவரும்  தோழர்களே!?

1.86 என்ற ஒற்றைக் கோரிக்கை நோக்கி நாங்கள் போராடுகிறோம் எங்கள் வலிகளை அறிந்து
நீங்கள் ஆதரவு தந்தால்
மகிழ்வோம் என்று
சொல்லிவிடுங்கள்

நாம் செல்வது சரியான பாதையே

தனித்து ஒற்றை கோரிக்கையாக போராடி  1.86 கேட்டால் 21000 பேருக்கு
கிடைக்க வாய்ப்புண்டு

அல்லாமல் நாமும்
கூட்ட்த்தோடு
4200 G.P  தான் வேண்டும் என்று போராடினால்

அவ்வளவு நிதியும் இல்லை சாத்தியமும் இல்லை என அரசு கை விரிக்கும்

மற்றவர்கள் சிறிது ஏமாற்றத்துடன் கலைந்து செல்வார்கள்

நாம் இரத்தக் கண்ணீருடன் நடுதெருவில் நிற்க வேண்டியது வரும்

நமது துன்பம் களைய ஒரே கோரிக்கை 1.86
(சம வேலைக்கு சம ஊதியம்)

1.86க்கு மட்டுமேதான்

போரட்டமா?

இல்லை !இல்லை! வாடிப் போனவர்கள் 1.86 ஆல்
கொஞ்சமாவது  துளிர் விடுகிறோம்

தன்னிறைவு என்பது 4200 G.P பெறுவதுதான்

படுகுழியில் உள்ளோம்
முதலில் 1.86 ஏணியால்
சம நிலைத்தை அடைவோம்

அதன் பின்னர்
4200,, G.P ,  CPS ஒழிப்பு
போன்ற இ்லக்குகளை நோக்கி கைகோர்த்து முன்னேறுவோம்

குறைந்த செலவு வைக்கும்
21000 பேருக்கு 1.86 கொடுக்கவே அரசு யோசிக்குமானால்

21 மாத நிலுவை ,
4200 G.p ,CPS ஒழிப்பு போன்றவற்றை அரசு நிறைவேற்றுமா?

21 மாத நிலுவை ,
4200 G.p ,CPS ஒழிப்பு போன்றவற்றையே
சங்கங்கள் போராடி  பெற முடியும் எனில்

எங்கள் 21000 பேருக்கு
1.86 பெற்றுத் தருவது
மிக மிக எளிதே!

முதலில் 1.86 என்ற இலை தழைகளை வைத்து எங்கள் மானத்தை மறைத்துக் கொள்கிறோம்

பின்பு
4200 G.P ஆடை  கேட்கும் போராட்டத்திற்கு கட்டாயம் வருவோம்

எங்கள் வலிகளை புரிந்து கொள்ளுங்கள்

கலங்கரை விளக்கு தேடி தனியாக  படகில்
பயணம் செய்ய எத்தனிக்கிரோம்

Cps, 4200 என்ற பெரிய கப்பல்கள் பின்னால் சென்றால் எங்கள் மீது கலங்கரை விளக்கு ( அரசு) வெளிச்சம் படாதோ? என்ற பரிதவிப்பில்........

மற்றபடி நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் இனமே

சங்கத்தில் இருந்து வெளியேறுவோம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களுக்கு எச்சரிக்கை கடிதம்

சங்கத்தில் இருந்து வெளியேறுவோம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களுக்கு எச்சரிக்கை கடிதம்

கொதித்தெழுந்த 2009 க்கு பின் பணிக்கு வந்த ஆசிரியர்கள்!!!

கொதித்தெழுந்த 2009 க்கு பின் பணிக்கு வந்த ஆசிரியர்கள்!!!

வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை

புதுடில்லி:'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்கு பவர்களும், டிச.,31க் குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டில்லியில் செயல்படும், செய்தி இணைய தளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்: வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், ௧ல், மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்கள், புதிதாக கணக்குதுவக்குபவர்கள், 

வங்கி,கணக்கு,எண்ணுடன்,ஆதார்,இணைப்பு,கட்டாயமில்லை

தங்கள் ஆதார் எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பள்ளி பாடத்திட்டம் மாற்றம் : கருத்து கூற, 'ஆன் - லைன்' வசதி?

'பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டு களாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதே போல, 1 - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 

இதனால், பிளஸ் 2முடிக்கும் மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல், உயர் கல்வி வாய்ப்புகளை இழக்கின்றனர். பாடத்திட்டத்தை மாற்ற, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், பாலகுருசாமி ஆகியோர் அடங்கிய, உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கலைத்திட்ட குழுவும் அமைக்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன. இது தொடர்பாக, தமிழகத்தில், நான்கு முக்கிய நகரங்களில், பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. ஆனால், உயர் கல்வியில் முக்கிய அங்கம் வகிக்கும் மருத்துவத் துறையினர், கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டக் கல்லுாரி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. இந்த குறையை தீர்க்க, இ - மெயில் மற்றும், 'ஆன் - லைன்' வாயிலாக, கருத்து கூறும் வசதியை, உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இணையதளத்தில், இதற்காக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 

'அதில் பயனீட்டாளர் குறியீட்டு எண் வழங்கி, ஒவ்வொருவரின் கருத்துக்களை, மின்னணு கோப்பாகவோ அல்லது பதிவாகவோ பெற வேண்டும்' என, பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.

தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. 

எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். 

அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றி, பட்டியலை தயாரித்து, சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, மாவட்ட வாரியாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது