''21 மாத சம்பளக்குழுநிலுவைத்தொகையைமுழுவதுமாக வழங்கமுதல்வர் பழனிசாமிநடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என, அரசுபணியாளர் சங்கம்
வலியுறுத்தியுளளது.
மதுரையில் சங்க மாநிலதலைவர் உ.மா.செல்வராஜ்கூறியதாவது:
சம்பளக்குழு முடிவுகள் 12லட்சம் அரசுபணியாளர்கள், ஏழு லட்சம்ஓய்வூதியர்களுக்குஏமாற்றம் தருகிறது. மூன்றுமாத போராட்டங்களுக்குபின் அரசு, ஜாக்டோ ஜியோகிராப் கூட்டமைப்பிடம் பேசிஒப்புக் கொண்டபடிசம்பளக்குழு அறிக்கையைபெற்று அமல்படுத்தியதுவரவேற்கத்தக்கது.
மத்திய அரசு, ஏழாவதுசம்பளக்குழுவில்குறைந்தபட்சம் 18 ஆயிரம்ரூபாய் சம்பளத்தைஅமல்படுத்தியது. மாநிலஅரசு 15 ஆயிரத்து 700ரூபாய் என நிர்ணயம்செய்ததுஏமாற்றமளிக்கிறது.
குறைந்த பட்சம் சம்பளம் 18ஆயிரம் ரூபாயாகநிர்ணயிக்க, வேண்டும்.அங்கன்வாடி, சத்துணவுபணியாளர்கள், கிராமஉதவியாளர்களுக்குகுறைந்தபட்சம் இளநிலைஉதவியாளர்கள் சம்பளம்வழங்காதது ஏமாற்றத்தைதருகிறது.
தொகுப்பூதியம்,மதிப்பூதியம்பெறுவோருக்கு 30 சதவீதசம்பள உயர்வும் ஏமாற்றம்தருகிறது. அவர்களுக்குகாலமுறை சம்பளம் வழங்கவேண்டும். தினக்கூலி,அவுட்சோர்சிங் முறையில்பணிபுரியும் மூன்று லட்சம்பேரில் ஐந்தாண்டுகள்பணி முடித்தவர்களுக்குகாலமுறை சம்பளம் வழங்கவேண்டும்.
ஊராட்சி செயலர்,அங்கன்வாடி, சத்துணவுபணியாளர், கிராமஉதவியாளர்களுக்குஓய்வூதியத்தை ஐயாயிரம்ரூபாயாக உயர்த்த முதல்வர்பழனிசாமி முன்வரவேண்டும். தமிழகத்தில்ஒரு கோடி பேர் படித்துமாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகங்களில்வேலைக்காக பதிவு செய்து,காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரசுதுறையில் நிரந்தரபணியிடங்களை குறைக்க,பணியாளர்சீராய்வுக்குழுவை அரசுஅமைத்துள்ளது. இதுநிரந்தர பணியிடங்களைஒழித்து ஆட் குறைப்புநடவடிக்கையைமேற்கொள்ளப் போகிறதோஎன்ற அச்சத்தைஏற்படுத்தியுள்ளது.
தேவையின்படி தினக்கூலி,அவுட்சோர்சிங் முறைகளில்பணி நியமனம் செய்யவும்அரசு திட்டமிட்டுள்ளது.எனவே காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். மத்திய அரசுபணியாளர்கள் 1.1.2016முதல் சம்பளமாற்றப்பயனைஅனுபவித்து வரும்நிலையில் தமிழக அரசு 21மாத நிலுவை தொகையைவழங்க மறுப்பதுஏற்புடையதல்ல.
அதை உடனடியாக வழங்க,முதல்வர் உத்தரவிடவேண்டும். இதுகுறித்துசென்னையில் அக்., 21ல்அரசு பணியாளர் கூடிஅடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து முடிவு செய்வர்,என்றார்.
No comments:
Post a Comment