Saturday, 28 October 2017

பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்...

பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்...

பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம் செய்யப்படும்..அப்போது ஊதியஉயர்வோடு Next higher payல் சற்று கூடுதலான ஊதியமும் கிடைக்கும்...ஆனால் இ.ஆக்கு மட்டும் ஊதிய உயர்வை தாண்டி த.ஆ 4500 Levelல்next higher pay ல் 1 ரூபாய் கூட கூடுதலாக வழங்கப்படவில்லை....36200 தொடங்கி 65500 வரை Level 2800ல்உள்ளதைப் போலவே Level 4500லும் உள்ளது..துல்லியமாக ஒரு ஊதிய உயர்வு மட்டுமே.த. ஆவாக பதவி உயர்வு பெறும் இ.ஆக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுக்கு பேரு தான் குமாரசாமி கணக்கு ...

இதுக்கு பேரு தான் குமாரசாமி கணக்கு ...

7வது ஊதியக்குழுவில் ஆரம்ப ஊதியம் விவரம்

BT க்கு 36400
BT HMக்கு 36700

பட்டதாரி ஆசிரியருக்கும் பட்டதாரி தலைமை ஆசிரியருக்கும் உள்ள ஊதிய வேறுபாடு வெறும் ரூ 300.

SGTக்கு 20600+2000
SG_HM க்கு 36200 ஆரம்ப ஊதியம்

இடைநிலை ஆசிரியர்களுக்கும்
இடைநிலை தலைமை ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள ஊதிய வேறுபாடு 13600.

அனைவரும் வாழ்க...

2009-க்குப் பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியன் தவிர ...

Friday, 27 October 2017

2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏன் இந்த அவலநிலை ?? எதற்காக இத்தனை போராட்டம் ??

2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏன் இந்த அவலநிலை ?? எதற்காக இத்தனை போராட்டம் ??

Click Here  Pdf file

https://drive.google.com/file/d/0BxkfFGAIPttbcTlTU1Y0U0twTlE/view?usp=drivesdk

Thursday, 26 October 2017

ஆறாவது ஊதியக் குழுவும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.

அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் 
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள 
ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்    குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

ஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009  வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,

             அடிப்படை ஊதியம்              :   4500
              அகவிலைப்படி ஊதியம்    :   2250
              அகவிலைப்படி 24%              :   1620
                                                                   =======
       (DA G.O.188.Dt.17.4.06)  TOTAL      :     8370
                                                                  =======

ஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்

                          அடிப்படை ஊதியம்     :    5200
                          தர ஊதியம்                     :    2800
                          அகவிலைப்படி              :    NIL
                                                                          =======
(New DA (2%) only from 1.7.2006) TOTAL   :     8000
                                                                          =======

முந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)

இவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம்.

இந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு  கொடுக்கப்பட்டது.

பெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ  அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.

(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)

               01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது.  அரசாணை  258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.

       Certain Employees / Teachers  Associations have brought to the notice of Government that the employees appointed as fresh recruits on or after 1.1.2006 and upto the date of issue of Orders happen to face loss in emoluments while fixing their pay in the revised pay structure and therefore requested to rectify the same by granting pay protection of allowing the fitment benefit to the new entrants as was allowed in the earlier pay commission periods.

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது.

பணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

 பணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது 
                 பணியாளர் சங்கத்தில்
    பணி  ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது

 ரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

ஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில்இருந்து பதவி உயர்வு பெற்றுசெல்லும் ஆசிரியர்களுக்கு உயர்பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போதுஇத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர்உயர்பதவியில் இத்தனி ஊதியம் அனுமதிக்கப்படக் கூடாது. என விளக்கம்கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேகம் என்னவென்றால் பதவி உயர்வுக்கான ஊதியநிர்ணயத்தின் போது 3 சதவீதத்திற்கு மட்டுமே தனி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
21.11.11 ல் இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்ற ஊதியம்
Pay 14030 + 2800 GP + 750 PP = Total = 17580
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நாள் 22.11.2011
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்படும் ஊதிய உயர்வுத் தொகை
Pay 3 % 530 + 1800GP = 2330
22.11.2011 ல் பட்டதாரி ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்
Pay 15310 + 4600 GP = 19910
இதில் என்ன சந்தேகம் என்றால்
15310 என்பது 14030 + 530 + 750 என்பதன் கூட்டுத் தொகை.
இந்த 750 இதனுடன் சேருமா?
அப்படி சேர்க்கும் பட்சத்தில் கிரேடு ஊதியம் 4600 + 750 மொத்தம் 5350 என்றுஆகாதா?
ஒரு பதவி உயர்வின் போது 3 சதவீதம் ஊதிய உயர்வு என்பது மட்டும் அல்லாமல் 750ம் ஊதிய உயர்வாக கணக்கிடப்படாதா? அப்பொழுது ஒரு பதவி உயர்வின் போது 750 + 530 என 1280 ஊதிய உயர்வாகக் கிடைக்குமா?

 750 PP Case Regarding Documents]. Have a look at it! http://www.trbtnpsc.com/2016/01/750-pp-case-regarding-documents.html?m=1

ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது.



இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர். பல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்? அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது

EMIS வலைதள குறைபாட்டை போக்க மின்னஞ்சல் மூலம் கோரிக்கை

EMIS வலைதள குறைபாட்டை போக்க மின்னஞ்சல் மூலம் கோரிக்கை

Tuesday, 24 October 2017

SABLல் மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனில் பின்தங்கி இருப்பதற்கு வகுப்பாசிரியர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டுமா? பல்வேறு கேள்விகளுக்கு SSA - RTI LETTER பதில்.

SABL முறை கற்பித்தலில்ஆசிரியர், தலைமை ஆசிரியர், 
ஆசிரியர் பயிற்றுநர்கள் என அனைவருக்கும் பங்கு...

4D-டெக்னாலஜி

முதல் படி:

இதற்கு முக்கிய தேவைஸ்மார்ட் போன்...

இரண்டாம் படி:

GOOGLE PLAY STORE-ல் Animal 4D+ என்ற Application Downloadசெய்துகொள்ளவேண்டும்..

மூன்றாம் படி:

Browsing Centre-ல் சென்றுசில படங்கள் A4 Sheet அளவுPrint Out எடுக்க வேண்டும்.

பதிவுயிறக்கம்செய்யவேண்டிய படங்கள்விவரம்;

1) யானை

2) குரங்கு

3) ஒட்டகச்சிவிங்கி

4) நாய்

5) எறும்பு

6) தேனீ

7) திமிங்கலம்

8) ஆமை

9) எலும்புக்கூடு

போன்ற படங்கள்..

Print Out எடுத்த பிறகு இந்தபடங்கள் கீழேயோ அல்லதுமேசை மேலேயோவரிசையாக அடிக்கிவைக்கவேண்டும்..

பிறகு நீங்கள் Downloadசெய்த Animal 4Dஅப்ளிக்கேஷனை Openசெய்து Tools என்றபகுதியில் Capture என்றுவரும் அதை கிளிக் செய்துஇந்த படங்களின் மேல்Scaning செய்வது போல்அல்லது பார் கோடுபார்ப்பது போல் Smartphone-ல் பார்க்கவேண்டும்...

பிறகு நடைப்பெறும்அதிசயம் பார்த்து மகிழ்ச்சிஅடையுங்கள்....

(இதே போல் இன்னும் சிலஅப்ளிக்கேஷன்கள்உள்ளது,

1)Octagon AR Humanoid,

2)SPACE 4D+.

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை

பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இப்புதிய கல்விக் கொள்கை, டிசம்பரில் வெளியிடப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர், சத்யபால் சிங் கூறியுள்ளார்.

கேரள மாநிலத் தலைநகர், திருவனந்தபுரத்தில் நேற்று, தேசிய கல்வியாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, அமைச்சர், சத்யபால் சிங் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பின், பெரும்பாலான கல்வியாளர்கள், துரதிருஷ்டவசமாக, பிரிட்டிஷ் ஆட்சி கால மனப்பான்மையை பிரதி பலிக்கும் வகையிலான கல்விக் கொள்கையை பின்பற்றினர்; இந்திய கலாசாரத்தை புறக்கணித்து, கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கால மனப்பான்மையிலிருந்து, கல்வியை விடுவிப்பது, அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது. கல்வித் துறையில், உலக நாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், நாம் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது.
அதற்கேற்ப, ஆரம்ப நிலையில், கல்வித் தரம் உயர்த்துதல், உயர் கல்வியை எளிதில் கிடைக்கச் செய்தல், அதிக மக்களுக்கு, கல்வி கிடைக்கச் செய்தல் ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட வேண்டும்.

ஆலோசனை

மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, புதிய கல்வி முறையை உருவாக்கும் வகையில், பல கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தற்போது, இறுதிக்கட்ட ஆலோசனைக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. வரும் டிசம்பரில், நாட்டின் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும்.

சிறந்த கல்வி பெறுவதற்காக, நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில், சர்வதேச நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நிகரான கல்வி மையங்கள், இந்தியாவில்
உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவில், உயர் கல்வி கிடைக்கும் விகிதம், 25.6 சதவீதம். அமெரிக்காவில், இது, 86 சதவீதமாகவும், ஜெர்மனியில், 80 சதவீதமாகவும், சீனாவில், 60 சதவீதமாகவும் உள்ளது. எனவே, உயர் கல்வியை மேம்படுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயர் கல்வி பெற, அதிக செலவு செய்ய வேண்டிய நிலை, நம் நாட்டில் உள்ளது. இதை மாற்றி, அனைவருக்கும், சிறந்த உயர் கல்வி கிடைக்கும் நிலை உருவாக வேண்டும்.

பல்கலைகளில், 50 சதவீத ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. டில்லி பல்கலையில், 4,000 பணி இடங்கள் காலியாக உள்ளன. ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர், முனைவர் பட்டம்
பெறுகின்றனர்.

பெரியளவில் மாற்றங்கள்

இது, உலக பொருளாதாரத்துக்கு, 0.2 சதவீத பங்களிப்பை மட்டுமே அளிக்கிறது. நாடுமுழுவதும், ஆய்வுப் படிப்புகளில், பெரியளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கஸ்துாரி ரங்கன் தலைமையில் குழு

நாட்டின் புதிய கல்விக் கொள்கையை தயாரிப் பதற்காக, ஒன்பது பேர் அடங்கிய குழு, பிரபல விஞ்ஞானி, கஸ்துாரி ரங்கன் தலைமையில் சமீபத்தில் அமைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை வரைவை உருவாக்கி, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு நிர்ணயிக்க ப்படவில்லை.

முதல் சுதந்திர போர் நடந்தது எங்கே?

ஒடிசாவைச் சேர்ந்த, பைகா விவசாயிகள் படையினர், 1817ல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், நாட்டின் விடுதலைக்காக நிகழ்த்தப்பட்ட முதல் சுதந்திர போராட்டமாக அறிவிக்கப்பட உள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் நேற்று, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: ஒடிசாவில் ஆட்சி செய்து வந்த, கஜபதி மன்னர்களின் கீழ், பைகா விவசாயிகள் படை இருந்து வந்தது. இவர்கள், 1817ல், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போர்களை நடத்தினர். இந்த போர், பைகா புரட்சி என்ற பெயரில், வெள்ளையர்களுக்கு எதிரான, முதல் சுதந்திர போராக கருதப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை, நாடு முழுவதும், வரலாற்று புத்தககங்களில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

2009 ஆசிரியர்களுக்கு:* (தோராயமாக) 6வது ஊதியக் குழுவில் 2009 - 2017 வரை, 8 ஆண்டுகள் இழப்புகள் !!!

*2009 மற்றும் TETஆசிரியர்கள்*

இது மாநில அரசிற்குஇணையான ஊதியமாறுபாடு மதிப்பீடு மட்டுமே

(மத்திய அரசிற்குஇணையல்ல)

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

ஊதிய முரண்பாடு நீடிக்கும்பட்சத்தில், 30 ஆண்டுகள்பணிக் காலம் கொண்ட, 2009 மற்றும் TETஆசிரியர்களின் ஊதியஇழப்புகள் :

*2009 ஆசிரியர்களுக்கு:*

(தோராயமாக)

😢6வது ஊதியக் குழுவில்

2009 - 2017 வரை, 8ஆண்டுகள்

1 மாத இழப்பு     = ரூ.13000.

1 வருட இழப்பு    = ரூ.1,50,000

8 வருட இழப்பு    =ரூ.12,00,000

😢 7 வது ஊதியக் குழுவில், 10 ஆண்டுகள்

1மாத இழப்பு        = ரூ.18,000 .

1 வருட இழப்பு     = ரூ.2,10,000 .

10 வருட இழப்பு   =ரூ.21,00,000

*TET ஆசிரியர்களுக்கு :*

(தோராயமாக)

😢6வது ஊதியக் குழுவில்

2009 - 2017 வரை, 5ஆண்டுகள்

1 மாத இழப்பு     = ரூ.10000.

1 வருட இழப்பு    = ரூ.1,20,000

5 வருட இழப்பு    = ரூ.6,00,000

😢 7 வது ஊதியக் குழுவில், 10 ஆண்டுகள்

1மாத இழப்பு        = ரூ.15,000 .

1 வருட இழப்பு     = ரூ.1,80,000 .

10 வருட இழப்பு   =ரூ.18,00,000.

இந்நிலையில் 7 வதுஊதியக்குழுவின் முடிவில்,

2009 ஆசிரியர்களுக்கு

ரூ.33 லட்சங்களும்,

TET ஆசிரியர்களுக்கு

ரூ.24 லட்சங்களும் இழப்புஏற்படும்.

*முதல் கோணலேமுற்றிலும் கோணல்*என்னும் நிலை ஏற்படின்,

😭😭😭😭😭😭😭😭

2009க்குப் பின் பணி பெற்றஒவ்வொரு இடைநிலைஆசிரியருக்கும் *பணிநிறைவின் போது ரூ.1கோடி வரை இழப்புஏற்படும்.*

😭😭😭😭😭😭😭

நேற்றைய (பணியேற்பில்) *ஆயிரங்களின் இழப்புகள்*,

இன்று (பணிக்காலத்தில்) *லட்சங்களாகவும்*,

இன்றைய *லட்சங்களின்இழப்புகள்*,

நாளைய (பணி நிறைவில்) *கோடிகளின் இழப்பாகமாறும்*.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன?

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன?

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்  (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகளான மதிப்புமிகு சசிதரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார். ( உயர் நீதிமன்ற விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிபதிகள் இடமாறுதல்)  மற்றும் நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தற்போதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்.*மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கினை சென்னைஉயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.

நீதியரசர் திரு.ஜி.ஆர்.சுவாமி நாதன் சென்னை நீதிமன்றத்திற்கு வரும் தேதி தெரிந்தவுடன்  இந்த வழக்கு விசாரணைக்கு வரும்  அநேகமாக இந்த வார இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஜாக்டோ ஜியோவின் மூத்த வழக்கறிஞர் அவர்கள்  வழக்கை விரைந்து கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

Monday, 23 October 2017

*தலை சிறந்த மனிதர்*


மேதகு *அப்துல் கலாம்* அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஜனாதிபதி மாளிகைக்கு  வந்தார்.

வாசலில், ஒருவர் அவர் காலைத் தொட்டார்...உடனே திரு. கலாம் அவர்கள்,

“எழுந்திரு....என்ன வேண்டும் உனக்கு” என்று கேட்டாராம்....அதற்கு அந்த பணியாள், “நான் இங்கே ஜனாதிபதியின் ஷூக்களைத் துடைத்து பாலிஷ் போடுபவன்....உங்கள் ஷூக்களைத் தாருங்கள்” என்று கேட்டாராம்.

உடனே, திரு.கலாம் அவர்கள்,

“You are dismissed…” இனி இங்கே உனக்கு வேலையில்லை” என்றாராம்.

அதற்கு அந்த  பணியாள்,

”உங்களுக்கு வேலை  வந்த உடனே, என்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டீர்களே” என்று வருத்தத்துடன் கூறினாராம்.

உடனே, திரு. கலாம் அவர்கள் சிரித்துவிட்டு,

”You are not dismissed but transferred”, இனி, நீ தோட்ட வேலை பார்.....என் ஷூக்களை கவனிக்க எனக்குத் தெரியும்” என்று கூறினாராம்.

அவர் பதவி, நிறைவு பெற்று, மாளிகையை விட்டு செல்லும்போது, அந்த தோட்டப் பணியாளரை அழைத்து,

”என் வேலை போய்விட்டது....ஆனால் நீ இன்னும் இங்கே வேலை செய்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறி, பூவாளியைக் கொண்டுவரச் சொன்னாராம்.

அவர் கொண்டு செல்ல வைத்திருந்த இரண்டு பெட்டிகளையும் நீர் ஊற்றி கழுவச் சொன்னாராம்..

ஏன் என்று பணியாளர் கேட்டதற்கு,

இந்த மாளிகையின் தூசி கூட என்னோடு வர நான் விரும்பவில்லை  என்று சொன்னாராம்.

*தனக்காக வாழாத, தேசத்திற்காக வாழ்ந்த சிறந்த மாமனிதர் அவர்.*

🙏🏻🙏🏻
_________________________

வாட்ஸ்அப் கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்...

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். 

ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டு தரப்படுகிறது. இந்த அப்டேட்களை பீட்டா வெர்ஷன் 2.17.387 மூலம் செயல்படுத்தப் போகிறது.

வாட்ஸ்அப் குழுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அட்மின்கள் இருக்கும்போது, ஒரு அட்மினை மற்றொரு அட்மின் நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு அட்மினை நீக்கம் செய்ய முற்படும்போது அதனைத் தடுக்கும் புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு சோதனையாளராக நீங்கள் புதிய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்ளிகேஷனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தச் சோதனைப் பதிவுகளில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இப்போது அதற்கான செயல்பாடுகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 

விரைவில் அப்டேட்டுகளுன் புதிய வசதிகள் வெளியாகும்போது வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் அதிகமானோர் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பைத்தான். 

இதில் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அளிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதில் முக்கியமானது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி. நாம் ஒரு நபருக்கோ அல்லது வாட்ஸ்அப் குரூப்களிலோ ஒரு மெசேஜை தவறாக அனுப்பி விட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது. இதற்காக வாட்ஸ்அப்பில் “Deletefor Everyone” என்ற சேவை அறிமுகமாக உள்ளது. ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற வசதி டெலிகிராம், வைபர் போன்ற பிற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வசதி தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும்இந்த வசதியைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வாட்ஸ்அப் பயனாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இவ்வசதி மூலமாக அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு முன்பாக அழித்து விட முடியும். இந்த மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள்என அனைத்து வகையான மெசேஜ்களையும் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக திரும்பப் பெற முடியும்.மேலும், யூ.பி.ஐ மூலம் பணப்பறிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப்பில் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி யூ.பி.ஐ மூலம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு பணப்பறிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அப்டேட்கள் தரப்படும். இந்த புதிய வசதியினை 'WhatsApp 2.17.295' என்ற பீட்டா வெர்ஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவ்வாறு புதிய வசதிகளை அப்டேட் செய்யும் வாட்ஸ்அப்பின் மொத்த பயனாளர்கள் 1.2 பில்லியன் பேரும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலும், 10 இந்திய மொழிகளிலும் வாட்ஸ்அப் கிடைப்பது குறிப்பிடத்தக்கது