Sunday, 5 August 2018

TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் - பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!

TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் - பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் வீட்டை முற்றுகையிட தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் முயற்சி செய்தனர்.

தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி ஆணை வழங்கவும், பணி நியமனத்திற்கு என புதிதாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர்.

பிறகு கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை மனுக்களாகப் பெற்று, இது சம்பந்தமாக முதல்வர்கள் அவர்களிடம் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.

Wednesday, 1 August 2018

*🔴BIG FLASH NEWS* *பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு உண்டு* *ஆசிரியர் தேர்வு வாரியம்*

*BIG FLASH NEWS*

*பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அரசாணை நிலை எண் - 110, நாள் - 26.05.2017 - ன் படி 10% இட ஒதுக்கீடு உண்டு*

*ஆசிரியர் தேர்வு வாரியம்*

Tuesday, 1 May 2018

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை நாளை வெளியிடப்படும் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

Monday, 19 February 2018

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு...

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு...

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்றன. 

இப்பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மட்டும் 2,223 காலியிடங்கள் உள்ளன.

பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு:

தமிழ்-299; ஆங்கிலம் - 237; கணிதம்- 468; அறிவியல் - 731; சமூக அறிவியல் - 488.ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 % நேரடி நியமன முறையிலும், 50 %பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. வெயிட்டேஜ் முறையில், தகுதித்தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட். மதிப்பெண்-க்கு 40 சதவீதமும் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 12 February 2018

BREAKING NEWS : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

BREAKING NEWS : பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 25% முதல் 30%  வரை தள்ளுபடி விலையில் சீருடைகள் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், பொதுத்தேர்வு முடிந்ததும் 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Wednesday, 7 February 2018

TNTET : ஆசிரியர் பணி நியமனங்களில் வெய்ட்டேஜை தொடர தமிழக அரசு முடிவு

TNTET : ஆசிரியர் பணி நியமனங்களில் வெய்ட்டேஜை தொடர தமிழக அரசு முடிவு

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டது. வெயிட்டேஜ் முறைக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததையடுத்து வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் இருக்குமா? அல்லது வெயிட்டேஜ் முறையே தொடருமா? என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். அத்துடன், 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் படிப்பு மதிப்பெண்கள் சேர்த்து கணக்கிடப்பட்டு தரவரிசை தயாரிக்கப்படும்.

உங்கள் ஆதார் கார்டு உங்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!


ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது.

அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது. 

இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.

இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

1) முதலில் ' https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.

2)  'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.

4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.

5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.

6) இந்தப் பக்கத்தில்  Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)

7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்

8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)

9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.

10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும். 

ஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.

Tuesday, 30 January 2018

TET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்?


2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு 
இன்னும் ஒரு வாரத்தில்  2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது இணைய பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். - தந்தி செய்தி

Wednesday, 24 January 2018

13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்...

13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்...

அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.

மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன.விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன.

குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Saturday, 13 January 2018

TET - வெயிட்டேஜ் முறையினை ரத்து செய்து தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் - 73% ஆதரவு! இந்து தமிழ் - நாளிதழ் 

TET - வெயிட்டேஜ் முறையினை ரத்து செய்து தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் - 73% ஆதரவு!

இந்து தமிழ் - நாளிதழ் 

Tuesday, 9 January 2018

FLASH NEWS:கடித எண் 29872 Dt: January 08, 2018 ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து.

கடித எண் 29872 Dt: January 08, 2018 ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து

Monday, 8 January 2018

TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 94ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டு வரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியும் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அதே போன்று தற்போது 745 பள்ளிகள் கணினி மயமாக்கப்படுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

அந்த பணிகள் முடிவுற்ற பின்னர் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோன்று 6 மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

Monday, 1 January 2018

🎉🎊🎉🎊🎉🎊🎉🎉 *இன்று பிறக்கும் 2018 - இந்த இனிய புத்தாண்டு*, *நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும்,* *நோய் நொடி இல்லாத வாழ்வையும், அள்ள அள்ளக் குறைவில்லாத செல்வத்தையும்,* *கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்*!!!! 💐💐💐💐💐💐💐💐 *இன்றும் என்றும் உங்கள் நட்புடன்,* *ந.பிரபு, M.A, B.Ed, D.T.Ed,* *அரசுப்பள்ளி ஆசிரியர்,* *கரூர் மாவட்டம்.* 💥💥💥💥💥💥💥💥 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎉🎊🎉🎊🎉🎊🎉🎉
*இன்று பிறக்கும் 2018 - இந்த இனிய புத்தாண்டு*,
*நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும்,*
*நோய் நொடி இல்லாத வாழ்வையும், அள்ள அள்ளக் குறைவில்லாத செல்வத்தையும்,*
*கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்*!!!!
💐💐💐💐💐💐💐💐
*இன்றும் என்றும் உங்கள் நட்புடன்,*
*ந.பிரபு, M.A, B.Ed, D.T.Ed,*
*அரசுப்பள்ளி ஆசிரியர்,*
*கரூர் மாவட்டம்.*
💥💥💥💥💥💥💥💥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்று பிறக்கும் 2018 - இந்த இனிய புத்தாண்டு

🎉🎊🎉🎊🎉🎊🎉🎉
*இன்று பிறக்கும் 2018 - இந்த இனிய புத்தாண்டு*,
*நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும்,*
*நோய் நொடி இல்லாத வாழ்வையும், அள்ள அள்ளக் குறைவில்லாத செல்வத்தையும்,*
*கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்*!!!!
💐💐💐💐💐💐💐💐
*இன்றும் என்றும் உங்கள் நட்புடன்,*
*ந.பிரபு, M.A, B.Ed, D.T.Ed,*
*அரசுப்பள்ளி ஆசிரியர்,*
*கரூர் மாவட்டம்.*
💥💥💥💥💥💥💥💥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Saturday, 23 December 2017

DEE PROCEEDINGS-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 27-12-2017 முதல் 30-12-2017 முடிய 4 நாட்கள் கணினிப்பயிற்சி

DEE PROCEEDINGS-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 27-12-2017 முதல் 30-12-2017 முடிய 4 நாட்கள் கணினிப்பயிற்சி

மாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு.... 💸இனி மாதாமாதம் செலுத்தி வந்த PLI தொகைக்கு சேவை வரி பதிலாக GST வரியாக மாற்றப்பட்டுள்ளது. 📱 எப்படி கணக்கிடுவது என்ற விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு....

💸இனி மாதாமாதம் செலுத்தி வந்த PLI தொகைக்கு சேவை வரி பதிலாக GST வரியாக மாற்றப்பட்டுள்ளது.

📱 எப்படி கணக்கிடுவது என்ற விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Friday, 22 December 2017

Flash News: TET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன். புதிய தலைமுறை செய்திகள்...

TET Weightage-ஆல்  வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

புதிய தலைமுறை செய்திகள்...

https://youtu.be/ed3FLSj-6nw

https://m.youtube.com/watch?v=ed3FLSj-6nw

Flash News: TET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

TET Weightage-ஆல்  வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

Monday, 18 December 2017

EMIS APP NEW DOWNLOAD LINK...

🔵🔴EMIS APP NEW DOWNLOAD LINK
http://www.kalvisiragukalrk.com/2017/12/emis-app-new-download-link.html?m=1

Thursday, 7 December 2017

Breaking news...இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு!!*

தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் மிகவும் பிற்பட்டோர் ஆணையம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று விரைவில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Thursday, 30 November 2017

ஆசிரியர் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து நடிகர் கமல் கருத்து!!!

பள்ளிவரும் பிள்ளைகள்,
பயின்றுவரும் கிள்ளைகள்;

தற்கொலைசெய்து சாவு!
இக்கொலையில் ஆசான்தானே காவு?
பள்ளி வருவது படிக்க- கூடாது
சுள்ளி எடுத்து அடிக்க,
ஆசிரியருக்கு கட்டுப்பாடு
ஆசு களைவதில் தட்டுப்பாடு ;
ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும்,
வழுக்கிப் போனால் தடுக்க வேண்டும்;
தடுக்காவிட்டால் வேலைப்பழி!
தடுத்துவிட்டால் கொலைப்பழி?
கண்டிக்கவும் உரிமையில்லை!
தண்டிக்கவும் உரிமையில்லை!
அழைத்துவா பெற்றோரை,
அறியட்டுமுன் அக்கப்போரை;
இதுதான் ஆசானெடுத்த முடிவு!
இனிமேல் அவருக்குண்டா விடிவு?
'காப்பியடித்ததை' கண்டறிந்தால்
கைபிடித்திழுத்த 'காமுகன்' பட்டம்!
'தப்பென' கண்டித்தால்
தற்கொலையால் 'காலன்' பட்டம்!
அழியாத கல்வி கொடுத்தவன்,
அழிகிறானே குற்றம் தடுத்தவன்;
போதிக்கிறவன் பேச்சு,
பேதலித்தே போச்சு;
குருவென எம்மை வணங்கவும் வேண்டாம்,
எமனென எம்மிதயம் துளைக்கவும் வேண்டாம்;
எம்மிதயமும் சதையால்தானே ஆனது-இன்று
எம்வாழ்வுதானே சிதையாகிப் போனது!
வேதனையுடன்,
கமல்

வணங்குகிறோம் உம்மை எம் இன்னல்களை அறிந்து குரல் கொடுத்தமைக்கு...

இச்சமூகத்தை மாற்றிடலாம் என நினைத்து ஏமாற்றத்துடன் பணிபுரியும் ஓர்ஆசிரியர்...

Tuesday, 28 November 2017

Monday, 27 November 2017

ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்


✍🏻ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.✍🏻

ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .
அப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை. 

மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் ? 

✍🏻மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம். 

✍🏻அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.

✍🏻 தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும் தண்டனையா? 

✍🏻இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?

✍🏻தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவானை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா? 

✍🏻 ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா . 

✍🏻தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.
சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் . 

✍🏻என்றும் உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.✍🏻

Monday, 20 November 2017

TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர்

வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்குஅடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி அருகே நம்பியூர் புதிய வருவாய் வட்டத்தைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் டிசம்பரில் அறிக்கை பெற்று தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிவாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றார்.

Sunday, 19 November 2017

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்

6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு

8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்

16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு

26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு

31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு

36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை

41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )

46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு