TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் - பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் வீட்டை முற்றுகையிட தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் முயற்சி செய்தனர்.
தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி ஆணை வழங்கவும், பணி நியமனத்திற்கு என புதிதாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர்.
பிறகு கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை மனுக்களாகப் பெற்று, இது சம்பந்தமாக முதல்வர்கள் அவர்களிடம் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment